எனது வலைப்பதிவு பட்டியல்

ஞாயிறு, 6 ஜூன், 2010

வலைபதிவுலகம் ஒரு பார்வை....

அன்பு உள்ளங்களே,


வலைபதிவு என்றால் என்ன? அது எதற்காக உருவாக்கப்பட்டது? அதை யார் யார் எல்லாம் பயன்படுத்துகின்றார்கள்? அதன் தாக்கம் என்ன? அதன் விளைவு என்ன? அது செய்யும் மாயைகள் என்ன? அது செய்யும் மந்திரங்கள் என்ன? 


இப்படி பல கேள்விகள் என்னுள்ளே எழுகின்றது? கம்ப்யூட்டர் இயக்க தெரிந்த அனைவரும் இப்போது சுலபமாக பதிவுகளை தொடங்க முடிகிறது. இவர் தான் வலைபதிவு வைத்துக்கொள்ள வேண்டும் இவர் வைத்துக்கொள்ள கூடாது என்று எந்த ஒரு முட்டுக்கட்டைகளும் இல்லை இந்த இணையதள  உலகில். யாரும் எதை பற்றி வேண்டுமானாலும் எழுதலாம். கவிதை , கட்டுரை, அரசியல்,  மருத்துவம், அனுபவங்கள், ஜோக்குகள்,  புரட்சி கருத்துக்கள், ஆன்மிகம், ஆதிகம், நாத்திகம், கதைகள், புனைவுகள், புதினங்கள்.... எதை பற்றி வேண்டுமானாலும் எழுதலாம். அதை 
பொதுமக்களின் பார்வைக்கு வைக்கலாம். யாருக்கும் எந்த ஒரு முட்டுக்கட்டைகளும் கிடையாது. அனைவருக்கும் எழுத்துரிமை , கருத்துரிமை சுதந்திரம்  என்பது  இதில் நிலை நாட்டப்படுகிறது. 


வலைப்பதிவுலகில் ஒருவர் சொல்ல வந்தது இன்னொருவருக்கு பிடிக்காமல் இருக்கல்லாம். உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். பத்து பேருக்கு பிடிப்பது நூறு பேருக்கு பிடிக்காது. அல்லது நூறு பேருக்கு பிடிப்பது பத்து பேருக்கு பிடிக்காது. அல்லது யாருக்குமே பிடிக்காது. அல்லது எல்லோருக்கும் பிடிக்கும். இது இயற்கை. சுருக்கமாக சொல்ல போனால் "பறவைகள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒருவிதம்." 
ஒருவருடைய இடுகை பிடிக்கவில்லை என்றால், உடனே நம் மறுமொழி (பின்னூட்டம்) அளித்து "நீங்கள் சொல்ல வந்த கருத்து" பிடிக்கவில்லை/உடன்பாடு இல்லை, அது தப்பு  என்று பல முறைகளில்   சொல்லி விடுகின்றோம். இங்கே "பல முறைகளில்" என்பது நல்ல டீசென்டான முறையில் இருந்து கீழ்தரமான முறைகள் வரை  அடங்கும். நாசூக்காக மறுத்து சொல்லுவது, அசிங்கமாக திட்டுவது என்பது அவர் அவர் என்னங்களுகேற்ப பின்னூட்டம் அமைகிறது. 


இடுகை இடுபவர் தம்முடைய இடுகையை ஒருவர் அமோதித்து பின்னூட்டம் இட்டால் மகிழ்வதும், இன்னொருவர் அதை எதிர்த்து அமோதிக்கமால் பின்னூட்டம் இட்டால் அவருக்கு தம்முடைய கருத்தை மீண்டும் வலியுறுத்தி மறுமொழி கூறுவதும், இன்னொருவர் அதை எதிர்த்து அசிங்கமாக திட்டி பின்னூட்டம் இட்டால் கொந்தளித்து மீண்டும் வசை பாடுவது இயற்கை.  யார் எப்படி பின்னூட்டம் இட்டல்லும் அதை பெருந்தன்மையாக ஏற்பது ஒன்னொரு வகை. எதிர்ப்பர்வகளை, பிடிக்காதவர்களை மனதில் வைத்து பின்னொரு நாளில் பின்னொரு வகையில் பழி வாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவது இன்னொரு வகை.. 


இந்த வலைபதிவு உலகின் வாயிலாக நான் மேல் சொன்னமாதிரி பகை,கோபம், பழியுணர்ச்சி, கேட்ட எண்ணம்   வளர்கிறது , கூடவே நல்ல விஷயங்களான நட்பும் வளர்கிறது, காதலும்  மலர்கிறது, அன்பும்  வலுப்பெறுகிறது, ஈகையும் , இரங்கலும் போன்ற நற்குணங்களும் வளர்கின்றன. சுருங்கச்சொல்லின் "யாருக்கு எது வேண்டுமோ அதை கொடுக்கிறார்கள். அதையே  பெறுகிறார்கள். " 


மொத்தத்தில் நான் சொல்ல வருவது இவைகள்  தான்.
1 . அடுத்தவர் கருத்துகளுக்கு மதிப்பு கொடுப்போம். 


2 . உங்களுக்கு பிடிக்காத பின்னூடங்களை அவைகள் உங்களை அசிங்கமாக திட்டும் வகையிலோ அல்லது கீழ்த்தரமாகவோ  அமைந்தால் ஒரு அளவிற்கு மேல் அனுமதிக்காதீர்கள். ஏனெனில் உங்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கபட்டிருகிறது. 


3 . முடிவே இல்லாமல் விவாதங்கள் தொடர்நதால் (பெரும்பாலும் ஈகோ பிரச்சினைகள் தான் என கருதுகிறேன்) உங்கள் முழு சுதந்திரத்தை பயன்படுத்தி தடை செய்து, உங்களிடம் விவாதம் செய்பவரகளிடம், "இனிமேல் நீங்கள் எதையும் என் தளத்தில் சொல்ல வேண்டாம், உங்கள் தளத்தில் வைத்துக்கொள்ளலாம் என்று சொல்லவிடுங்கள்."  இந்த முயற்சி சற்று விவாத சூடு தணிக்கும்  முறை தான்.  இதன் மூலம், காழ்புணர்ச்சி, பழிஉணர்ச்சி, வஞ்சம், கொதிப்பு, போன்ற தீய குணங்கள் வளர்வதை கொஞ்சம் தவிர்க்கலாம். 


4 .  அரசியல், புரட்சி போன்றவைகளை மையமாக வைத்து இருக்கும் தளங்களிடம் சற்று கவனமாக இருக்கவேண்டும். என் என்றால் அந்த மாதிரி தளங்கள் ஒரு குழுவாக செயல் படும். 
என்பதை கருத்தில் கொள்ளுங்கள். அந்த மாதிரியான தளத்தை எட்டி பாருங்கள். அந்த தளத்தில் இருக்கும் கட்டுரைகள் கருத்துக்கள் பிடிக்கவில்லை என்றல் பின்னூட்டம் இடுவதை தவிருங்கள்.  பிடித்தால் தொடருங்கள். எப்படி ஒரு அரசியல் கட்சி பொதுக்கூட்டத்தில் ஒருவன் மற்ற்றொரு கட்சி காரனை திட்டுவதை வேடிக்கை பார்கின்றீர்களோ.. அதே மனதுடன் இந்த மாதிரியான தளங்களை வேடிக்கை பாருங்கள் என்று சொல்லுகிறேன். 


5 . மொத்தத்தில் நாம் அனைவரும் சேர்ந்து வலை பதிவுலகை நல்லதையே  கொண்டு வளர்ப்போம்.  நட்பை பாராட்டுவோம். நேசக்கரம் கொண்டு வலை வருவோம். தீயதை தள்ளி வைப்போம். நல்லவற்றை அள்ளிக்கொள்வோம். 


-அன்புடன்
Mootoo.









வியாழன், 3 ஜூன், 2010

உள்ளத்தில் நல்ல உள்ளம்..- இந்த பாடல் பிடிக்குமா?

அன்பு உள்ளங்களே..

முதல் முதலாய் எனக்குள்ளும் ஒரு ஆர்வம் ஏற்பட்டு இதோ என் mootoo ப்ளாக்கை தொடங்கி இருக்குறேன். பலநாட்கள் பலதரப்பட்ட உள்ளங்களின் உணர்சிகளை கட்டுரை, கவிதை, கதை, இலக்கியம், வரலாறு, சமூகம், பக்தி, ஆத்திகம், நாத்திகம், இன்னும் பல இன்னும் பல.. இவைகளின் வாயிலாக படிக்கும் போது எனக்கும் அந்த ஆர்வம் ஏற்பட்டு இதோ தொடங்கி விட்டேன்.

இந்த தளத்தின் Layout கொஞ்சம் அப்படி இப்படி பார்பதற்கு சரியாக இருக்காது. கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்க. முதல் முதலாய் ... என்பதால் கொஞ்சம் நேரம் ஆகிறது.

என்ன எழுதுவது? இதோ ஒரு சின்ன தலைப்பு "உள்ளத்தில் நல்ல உள்ளம்...". அனைவருக்கும் பிடிக்கும் என நினைக்கின்றேன். என்ன ஒரு அருமையான பாடல். அற்புதமான நாடி நரம்புகளை சுண்டி இழுக்கும் பாடல். கிட்டத்தட்ட நான் பத்தாவது படிக்கும் பொது என நினைக்கின்றேன். அப்போது கேட்டதிலிருந்து என் உள்ளத்தை உருக்கிய ..உருக்கிகொண்டிருக்கும் பாடல்.

அது போல..உங்களுக்கும் எதாவது ஒரு பாடல் இருக்கும் என நினைக்கிறேன்.
அப்படி இருந்தால் கொஞ்சம் இங்கே தட்டி விடுங்கள். முயன்றவரை நான் நீங்கள் சொல்லும் அணைத்து பாடல்களையும் சேர்த்து பொதுவான இடத்தில வைத்து பகிர்ந்து கொள்ள முயற்சிகின்றேன்.

அன்புடன்,
Mootoo